சாலையில் சிங்கமாய் சீறி
இயந்திரக் குதிரைகளில்
பறந்தவர்களை
காவல் துறை
கேமிராக் கண்களில்
பார்த்து கைகளில்
விலங்கை மாட்டியது.
சிறையின் கம்பிகளுக்குள்
இருந்து கண்ணயர்ந்தவர்களின்
கனவில் ஒரு தேவதை வந்து
சொன்னாள்..
போட்டிகளுக்கென்றே
களங்கள் இருக்கின்றன..
திறன்களையெல்லாம்
அங்கே கொட்டினால்
கோப்பைகளெல்லாம்
வீட்டில் குவியுமே என்று.
Posted by ராமலக்ஷ்மி on May 18, 2011 at 11:19 pm
எதையும் முறையாகப் பயன்படுத்தினால் அதன் பலன் சிறப்பாக இருக்கும் என்பதை அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.
Posted by சூர்யா on May 19, 2011 at 6:41 am
நீங்கள் வருகை தந்து ஊக்குவித்த நன்றியுடன் சூர்யா