அந்த குழந்தை
அப்பாவிடம் கூறியது
அதற்கு ஏன்
மீசை வளரவில்லை
என்று.
அப்பா அதனிடம்
கேலியாக
மூன்றில்
எங்கு மீசை
என்று.
அப்பாவை கேட்ட
அப்பாவிக் குழந்தை
தன் செல்லப் பூனையிடம்
கேள்வியாக இரண்டில்
உனக்கு மட்டும்
எப்படி மீசை
என்றது.
திடீரென பூனையின்
மீசையிலேறிய
கௌரவத்தில்
அப்பாவின் தோரணை
அதன் உறுமலில்
உருவம் கொண்டது.
Posted by nathnavel on August 18, 2011 at 2:07 pm
அருமை.
Posted by soorya neelacantan on August 18, 2011 at 10:41 pm
உங்களின் ஊக்கத்திற்கும் அன்பிற்கும் நன்றி. சூர்யா
Posted by ராமலக்ஷ்மி on August 30, 2011 at 7:40 pm
நன்றாக இருக்கிறது சூர்யா. திண்ணையில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள்!
Posted by soorya neelacantan on August 31, 2011 at 7:59 am
உங்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றி. உங்கள் ஊக்கங்கள் எனக்கு உற்சாகம் தருகின்றன. சூர்யா