கொசுவிற்கு பாராட்டு – சூர்யா நீலகண்டன்


கொசுவிற்கு பாராட்டு

ஒரு அரசியல் கூட்டத்தில்
எல்லோரும் கைதட்டுவதைப்
பார்த்து எதற்கு
கைதட்டுகிறார்களென
தாய் கொசுவிடம் கேட்டது
குட்டிக் கொசு.
கை தட்டுவதே
பாராட்டுவதற்குத்தான்
என்றது தாய்கொசு.

பசியுடன் உணவு தேடி
அலைந்த அந்த
குட்டிக் கொசு
நடனமாடி நடனமாடி
ஒருவரின் முன்பு
ஆடியது..

அவர் கவனிக்கவில்லையென்று
முகத்தின் முன்பாக
ஆடி கன்னத்தில்
துளை போட்டு
மது மயக்கத்தில்
மயங்கி நின்றது.

அவர் இரு கைகளையும்
அடிப்பதற்காக
எத்தனித்தபோது
பாராட்டின் பெருமிதத்தில்
கொசு இன்னும்
முகத்திற்கருகில்
ஆடிப்பறக்க
அவரின் கைகளுக்குள்
கொசுவின் எல்லாப்பிரிவு
ரத்தங்களும்
சித்திரமாய் ஜொலித்தன.

5 responses to this post.

 1. பாராட்டுக்கும் என்றும் மயங்கக் கூடாது. நல்ல கவிதை. திண்ணை இதழ் வெளியீட்டுக்கு வாழ்த்துக்கள்!

  Reply

 2. Posted by Padmanaban on October 20, 2011 at 7:33 am

  Nice Surya,

  Nice contribution… Next write about “student’s suffering because of Indian education system”

  Reply

  • ஊக்கங்களுக்கு மிக்க நன்றி. நிச்சயமாக நான் நீங்கள் சொன்ன தலைப்பில் எழுதுவேன்… சூர்யா.

   Reply

 3. தியாகத்தின் வேரைத்தேடி: தென் ஆப்பிரிக்காவிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு பயணம்

  http://arulgreen.blogspot.com/2011/10/blog-post_19.html

  Reply

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: