மானும் கொம்பும் – திண்ணையில் வெளியான கவிதை

மானும் கொம்பும்

மண்ணுக்கு மேலே
ஒரு மான் கொம்பு தெரிய
மண்ணை தன்
கூரியக் கொம்பால்
தோண்டித் தோண்டி
எறிந்தது இளமான்.

தோண்டித் தோண்டி
மண்ணுள் புதைந்த
மானைக் காப்பாற்றும்
முயற்சியில்
மானின் கொம்புகளே
ஒடிந்து போக
உள்ளே வாடி
இலை உதிர்ந்த
ஒரு சிறு மரத்தின்
வேர்களேத் தெரிந்தன.

தன் இழந்த
கொம்புகளுக்காய்
வருந்தாத மான்
புதைந்த மானுக்காய்
வருந்திச் சென்றது.

பூனையின் தோரணை – திண்ணையில் வெளியான கவிதை

ஓவியம் - சூர்யா நீலகண்டன்

அந்த குழந்தை
அப்பாவிடம் கூறியது
அதற்கு ஏன்
மீசை வளரவில்லை
என்று.

அப்பா அதனிடம்
கேலியாக
மூன்றில்
எங்கு மீசை
என்று.

அப்பாவை கேட்ட
அப்பாவிக் குழந்தை
தன் செல்லப் பூனையிடம்
கேள்வியாக இரண்டில்
உனக்கு மட்டும்
எப்படி மீசை
என்றது.

திடீரென பூனையின்
மீசையிலேறிய
கௌரவத்தில்
அப்பாவின் தோரணை
அதன் உறுமலில்
உருவம் கொண்டது.

செய்தி:

நான் ஆங்கிலத்தில் ஒரு கவிதை எழுதியுள்ளேன். அதனால் நான் அதனை ஒரு புதிய வலைப்பூவில் இட்டுள்ளேன். இதோ அதன் இணைப்பு இங்கே http://saisoorya.wordpress.com நீங்கள் இதனை blogroll பகுதியிலும் காணலாம்…

நாய்க்கு நன்றி – வல்லமையில் வெளியான கவிதை

சாலையில் இருமருங்கும்
காட்டு சிங்கங்களும்
வேட்டை நரிகளும்
சீறி பாய்ந்ததை
பார்த்து பயந்து போன
மக்களைப் பார்த்து
பயந்து போனேன்
நானும்.

அவைகளிலிருந்து
தப்பிக்க நினைக்கும்
தருணங்களில்
தந்திரமாய் தப்பித்து
கடக்கும் தருணத்தை
தயவுடன் காட்டிய
என் நாய்க்கு
நன்றியுள்ளவனாய்
நானும்

நான் வரைந்த மகாத்மா

நான் வரைந்த மகாத்மா

செய்தி - சேவாகிரமில் மகாத்மா காந்தியின் கண்ணாடி களவு போய் விட்டதாம்... ஒரு வேளை இன்றைய இந்தியாவை காந்தி பார்க்க வேண்டாமென்ற நல்லெண்ணத்தில் திருடன் கண்ணாடியை எடுத்துப் போயிருக்கலாம்.

சாலைக் குதிரைகள்- திண்ணையில் வெளியான கவிதை

சாலையில் சிங்கமாய் சீறி
இயந்திரக் குதிரைகளில்
பறந்தவர்களை
காவல் துறை
கேமிராக் கண்களில்
பார்த்து கைகளில்
விலங்கை மாட்டியது.

சிறையின் கம்பிகளுக்குள்
இருந்து கண்ணயர்ந்தவர்களின்
கனவில் ஒரு தேவதை வந்து
சொன்னாள்..

போட்டிகளுக்கென்றே
களங்கள் இருக்கின்றன..
திறன்களையெல்லாம்
அங்கே கொட்டினால்
கோப்பைகளெல்லாம்
வீட்டில் குவியுமே என்று.

எங்கும் இறைவன்

சாலை கடந்த
போது கண்ட
காட்சி. “என்ன
இது இங்குமா
இறைவன் இருப்பார்”
என்று என்
மனதிற்குள்
வினா எழும்பியது.
சாராய கடையில்
திருஷ்டி படாமல்
இருக்க திருஷ்டி
விநாயகர்.
கடையில் திருஷ்டி
கழிக்கலாம்,
சொர்க்கத்தில்
திருஷ்டி கழிக்கலாம்
மற்று எங்கும்
திருஷ்டி கழிக்கலாம்.
நரகத்தில் கழிக்கலாம?

எப்பா ஊன் பாட
பாத்துட்டு போய்யா
அப்பா.”என்று
உறுமினான் ஒருவன்.
“விநாயகா,அவர்களின்
திருஷ்டியை கழித்து
விட்டு குடியை
இவ்வுலகத்திலிருந்து
அழித்துவிடு “என்று
இறைவனிடம்
வேண்டினேன்.

%d bloggers like this: